முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து

செய்திகள்/ நிகழ்வுகள்

இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள், டானிக்குகள், இருமல் மருந்துகள், சத்து டானிக்குகள் வழங்கப்பட்டது. 401 நோயாளிகள் வந்திருந்து தங்களது நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சென்றனர்.இதில் விசேசம் என்னவென்றால் ஏற்கனவே பல இடங்களில் மருத்துவ முகாம் நடத்திய பொழுது அதிகபட்சமாக 350 நோயாளிகள் தான் வந்துள்ளனர். அனால் நமது தலைவர் பெயரில் நடத்திய முகாமில் 401 பேர் வந்திருந்து எதிலும் நமது தலைவருக்கு தான் முதலிடம் என்பதை நிருபித்து உள்ளோம். வந்திருந்தவர்கள் அனைவரும் நமது தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்து மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். 
எந்தவித அரசியல் பலமும் இல்லை அவர் பெயரை சொல்லி சம்பாதிக்கவும் இல்லை, அனால் அவர் மறைந்து 15 வருடம் ஆகியும் அவர் பெயரில் பல நல்லகாரியங்களை செய்துவரும் தலைவரின் அன்பு இதயங்களை என்று வந்தவர்கள் அதிசயத்து போனார்கள். நிகழ்ச்சியில் பேசிய திரு.டாக்டர்.சரவணன் அவர்கள் தான் ஒரு சிவாஜி ரசிகர் எனவும், சங்கிலி திரைப்படத்தை நான்கு காட்சிகள் தொடர்ந்து பார்த்ததை நினைவுகூர்ந்து எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
இம்முகாமிற்கு தனது பள்ளியில் இடத்தையும் தந்து எல்லாவகையிலும் உதவி புரிந்த திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், திரு.சந்திரசேகர் அவர்கள், முகாமிற்காக உழைத்த அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகதீஸ்பாண்டியன், செந்தில்குமார், பி.செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நவீன், நடராஜன் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அறக்கட்டளையை சேர்ந்த திரு.நாஞ்சில் இன்பா அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்து முகாமிற்கு சிறப்பு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமை திரு.ரமேஷ்பாபு, திரு.சுந்தராஜன், திரு.சோமசுந்தரம் மூவரும் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
முக்கியமாக நமது தலைவரின் அருந்தவப்புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

முகாம் நிழற்படங்கள்.

செய்தி மற்றும் நிழற்படங்களுக்கு நன்றி திரு கா. சுந்தரராஜன், செயலாளர், மற்றும் நிர்வாகிகள், சிவாஜி காமராஜ் அறக்கட்டளை, மதுரை

முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து